ஜோக்ஸ்

சிறு கதை

கவிதை

கட்டுரை

முத்துகள்

பொது அறிவு

உங்கள் கருத்து

உதவியவர்கள்

 

விளம்பரம்

 



தமிழ் தோட்டம் 

உங்களை அன்புடன் வரவேற்கிறது

 

Google

பணமிருந்தும் பட்டினி

கிருஶ்ணதேவராயர் நாட்டின் நலன் கருதி/ வலிமையான குதிரைப் படையை அமைக்க எண்ணினார். ஆயிரம் குதிரைக் குட்டிகளை வரவழைத்தார். வீட்டுக்கொரு குதிரைக்குட்டியும் பணமும் கொடுத்தார். அவற்றை நல்ல முறையில் வளர்க்க ஆணையிட்டார்.

தெனாலிராமன் தனக்குக் கொடுக்கப்பட்ட குதிரைக் குட்டியை ஓர் அறைக்குள் அடைத்து வைத்தான். உணவு கொடுப்பதற்கு மட்டும் சுவரில் ஒரு துவாரம் அமைத்திருந்தான். அதன் வழியாகக் குதிரைக்குக் காய்ந்த புல்லை மட்டுமே கொடுத்து வந்தான்.

சில மாதங்கள் சென்றன.........

தெனல்லிராமனைத் தவிர அனைவரும் தங்களது குதிரைகளுடன் அரண்மனைக்கு வந்தனர். குதிரைகள் 'கொழு கொழு' வென இருந்தன. அவற்றைக் கண்ட மன்னர் பெருமகிழ்ச்சி அடைந்தார்.

தெனல்லிராமனைப் பார்த்து, 'நீ மட்டும் குதிரையை ஏன் அழைத்து வரவில்லை?' என்று கேட்டார்.

'அரசே! அந்த பொல்லாத குதிரையை என்னால் பிடித்து வர இயலவில்லை. குதிரைப்படைத் தலைவரை என்னுடன் அனுப்புங்கள். பிடித்து வருகிறோம்" என்று தெனல்லிராமன் கூறினான்.

தெனல்லிராமன், குதிரை இருந்த அறையைப் படைத் தலைவருக்குக் காட்டினான். படைத்தலைவர் துவாரத்தின் வழியே எட்டிப் பார்த்தார். குதிரை அவரது தாடியைக் காய்ந்த புல்லென எண்ணி, வாயால் கவ்வி இழுத்தது.

வலி தாங்க முடியாமல் படைத்தலைவர் அலறினார்.

உடன் வந்திருந்த காவலர்கள் மிகவும் சிரமப்பட்டு அவரைக் குதிரையிடமிருந்து விடுவித்தனர். பிறகு சுவரை இடித்துக் குதிரையை வெளியே கொண்டு வந்தனர்.

எலும்பும் தோலுமாய் இருந்த குதிரையை அரண்மனைக்குக் கொண்டு சென்றனர். குதிரையைக் கண்ட மன்னர். ஆத்திரம் அடைந்தார்.

"குதிரை ஏன் இப்படி உள்ளது?" எனத் தென்னலிராமனிடம் கேட்டார்.

"மன்னா! காய்ந்த புல்லைத் தின்று வளர்ந்த குதிரை படைத்தலைவரைப் படாதபாடு படுத்திவிட்டது. நன்றாகத் தீனி போட்டிருந்தால் என்ன ஆகும்?" என்று கேட்டார் தென்னலிமராமன்.

கோபமடைந்த மன்னர், "குதிரையை வளர்க்க உன்னிடம் கொடுத்த பணத்தை என்ன செய்தாய்?" என்று கேட்டார்.

"அரசே! உங்கள் ஆணைக்குப் பயந்து, குடிமக்கள் தங்கள் பணத்தையும் செலவு செய்து குதிரையை வளர்த்தனர். அதனால் குதிரைகள் கொழு, கொழு வென வளர்ந்தன. ஆனால் பட்டினி கிடந்த்தால் மக்கள் இளைத்துப் போய் விட்டனர்" எனப் பதில் கூறினான்.

தெனாலிராமன் கூறியதைக் கேட்ட கிருஶ்ணதேவராயர் தம் தவற்றை உணர்ந்து வருந்தினார்.

_______________________________________________________

 

   

உங்களது படைப்புகளை அனுப்புவதற்கு 

நீங்கள் செய்ய வேண்டியது!

_______________________________________________________
 


உங்கள் கருத்து


விளம்பரம்

 Sponsor


தமிழ் வலைகள்


 உங்கள் பார்வை எண்


தமிழ் தோட்டம் ஆரம்பித்த நாள் 01-03-2006

Copyright 2006 தமிழ் தோட்டம்  All Rights Reserved.