| தலைவாசல் | கவிதை | கட்டுரைகள் | நகைச்சுவை | சிறுகதைகள் | பொது அறிவு | பாப்பா பாடல்கள்  |

| உதவி | உங்கள் நலம் | முத்துகள் |

கவிதைகள்

 படைப்புகள்

உங்கள் படைப்புகளை அனுபுவதற்கு இங்கே சுட்டவும்

படைப்புகள் அனுப்பி உதவிய நல் உள்ளங்களுக்கு நன்றி நன்றி நன்றி

   

தமிழ் கவிதைகள்

காதல் (T.வித்ரா)

மதங்களை காதலி
தீவிரவாதியாகதே!
ஜாதியைக் காதலி (ஆண், பெண்)
வெறிக் கொள்ளாதே!
நிறத்தைக் காதலி - அதில்
உயர்வுத் தாழ்வு காணாதே!
மண்ணைக் காதலி - அதற்காக
உறவைப் பகைக்கொள்ளாதே!
நாட்டைக் காதலி - நாட்டை
இழி நிலைக்குத் தள்ளாதே!
இயற்கையைக் காதலி - அதை
அழிக்க நினைக்காதே!
தாயைக் காதலி
காரியவாதி யாகாதே!
தந்தையைக் காதலி
பணப்பையை பார்க்காதே!
உடன்பிறப்பைக் காதலி - அவர்களால்
ஏற்படும் தீமையை நினைவில் கொள்ளாதே!
பணத்தைக் காதலி - அதுவே
வாழ்க்கை எனக் கொள்ளாதே!
மனதைக் காதலி
வெளி அழகைப் பார்க்காதே!
நல்லதைக் காதலி
தீயதை அணுகவிடாதே!
காதலை காதலி
கைவிட்டுவிடாதே!

நன்றி T. வித்ரா

 

விளம்பரம்


ad


 
 
 
 

 உங்கள் பார்வை எண்
தமிழ் தோட்டம் ஆரம்பித்த நாள் 01-03-2006